30 ஏப்., 2019

ரிசாத்தும் கைதாவாரா?


இலங்கை அரச அமைச்சரான ரிசாத்; பதியுதீன் அண்மைய குண்டுவெடிப்புக்களினையடுத்து சந்தேக வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளளர்.இதன் தொடர்ச்சியாக அவரது முன்னாள் செயலாளர் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினர் மன்னாரில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 6 டெடனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரிசாத்தின் தம்பியும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான ஒருவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.