புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

30 ஏப்., 2019

யாழ்.குருநகா் பகுதி இன்று அதிகாலை சுற்றிவளைப்பு

யாழ்.குருநகா் பகுதியில் 51வது படைபிாிவின் ஒழுங்கமைப்பில் கடற்படையினா், விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இன்று அதிகாலை 4 மணியளவில் மேற்கொண்டுள்ளனா்.

இந்த நடவடிக்கை குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியால் தாக்குதல்தாரிகள் உள்நுழையலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றிவளைத்து தேடுதல் இடம்பெற்றதுஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதலை

தொடர்ந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முப்படையினர் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் சுற்றிவளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பற்று வருகின்றன.

அந்தவகையில் பருத்தித்துறை, நெல்லியடி, நாவாந்துறை, ஐந்துசந்தி மற்றும் தீவகப்பகுதகள் ஆகிய இடங்களில் இராணுவம், கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.அந்த வரிசையில் மேற்படி பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.