புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 மே, 2019

புதிய அதி நவீன Benz ரக நோயாளர் காவு வண்டி ( Ambulance) மத்திய சுகாதார அமைச்சால் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா MP மத்திய சுகாதார அமைச்சர் Dr ராஜித சேனாரத்ன
அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய அதி நவீன Benz ரக நோயாளர் காவு வண்டி ( Ambulance) மத்திய சுகாதார அமைச்சால் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் உட்புறம் குளிரூட்டப்பட்ட ஒரு அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கக் கூடிய சகல உபகரணங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊர்காவற்துறைக்கு மட்டும் அல்லாது ஏனைய தீவுப் பகுதி வைத்தியசாலைகள், நெடுந்தீவு, நயினாதீவு வைத்தியசாலைகளில் இருந்து குறிகட்டுவான் இறங்குதுறைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் அனலைதீவு, எழுவைதீவு வைத்தியசாலைகளில் இருந்து கண்ணகி அம்மன் இறங்கு துறைக்கு வரும் நோயாளர்களையும் கொண்டு செல்ல தேவைப்படும் போது ஊர்காவற்துறை நோயாளர் காவு வண்டியே சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது.