புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 மே, 2019

அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை -கூட்டமைப்புக்குள் குழப்பம்!


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆரா ய்ந்தே தீ


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆரா ய்ந்தே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் நிர்மலநாதன் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான பிரேரணை தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னதாக அமைச்சு பதவியிலிருந்து விலகவேண்டும். தவறின் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்தார்.