புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 மே, 2019

நம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்

மாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்ட நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் பலருக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வந்துள்ளது.கைதட்டல் எல்லாம் வாக்குகளா மாறுமா என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதை விட மிக அதிகமான வாக்குகளை பெற்று தமிழ் மக்களுக்கு தமது கட்சியின் அவசியத்தை உணர்த்தியுள்ளார்

கூட்டணி போட்டு போட்டிபோட்ட அதிமுக திமுகவுக்கு நடுவே தனியாக நின்று வித்தியாசமான பிரச்சார அணுகுமுறை , எளிமையான பிரச்சாரம் , எளிமையான வேட்பாளர்களை நிறுத்தி இப்போ கமலா , சீமானை என்ற நிலைக்கு வளர்ந்திருப்பது நல்லதொரு எதிர்காலம் நாம்தமிழர் கட்சிக்கு இருப்பதையே உணர்த்தியிருக்கிறது.