புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2019

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா! ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு!!
ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், வரும் 30ம் தேதி அவர் பதவியேற்ப்பதாகவும், தற்போது முதல்வர் பதவியிலிருந்து சந்திரபாபு நாயுடு இன்று ராஜினாமா செய்வதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டிற்கும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனால் பெரிய அளவிலான ஆட்சி மாற்றம் எதிர்பார்ப்பு ஆந்திராவில் நிலவியது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்திற்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சூறாவளி பிரச்சாரம் செய்தது. இதனால், இந்த முறை ஆந்திர சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்பு அதிகரத்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பின்தங்கியுள்ளது. முற்பகல் 11.30 மணி நிலவரப்படி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் முன்னிலையிலும், தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

மொத்தமுள்ள 175 தொகுதிகளை ஒப்பிடும் போது தெலுங்கு தேசம் மிகவும் பின்தங்கியுள்ளது. பெரும்பாண்மைக்கு தேவை 88 இடங்கள். ஆகும். இதே போன்று , சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 38 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30ம் தேதி பதவியேற்கிறார். இதனால், தற்போது முதல்வர் பதவியிலிருந்து சந்திரபாபு நாயுடு இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக ஏ.என். ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று மாலைக்குள் இது பற்றிய முழுமையான செய்தி சந்திரபாபு நாயுடு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad