வியாழன், மே 16, 2019

கிளிநொச்சி வளாகத்தில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்

யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் இன்று இராணுவம் மற்றும் பொலிஸாாினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு அங்கு பாாிய தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனா்.

எதிர்வரும் வாரத்தில் பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்கலைகழக நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக இன்றைய நாள் படையினருக்கு சோதனை நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது 450 இராணுவத்தினர் மற்றும் 90 காவல்துறையினர் இணைந்து இச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதே பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.