புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 மே, 2019

இலங்கையில் பத்திரிகையாளர்களிற்கு மீணடும் ஆபத்து

மகிந்த ராஜபக்ச காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் சிறிலங்கா புலனாய்வு துறை அதிகாரியொருவர் மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு அச்சம் வெளியிட்டுள்ளது.

சிறிிலங்கா இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரி பிரபாத் புலத்வட்டே மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதை தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

2008 இல் பத்திரிகையாளர் கீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்து 2017 இல் அதிகாரிகள் ஐந்து புலனாய்வு பிரிவினரை கைதுசெய்தனர் என்பதை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சந்தேகநபர்களில் மேஜர் புலத்வட்டேயும் ஒருவர் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் குறிப்பிட்டிருந்தது,என தெரிவித்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு விசாரணைகளின் போது இவரிற்கு லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த லசந்தவிக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க டிரிபோலி படையணி என்ற இராணுவ புலனாய்வு பிரிவொன்றை கோத்தபாய ராஜபக்ச இயக்கினார் அந்த பிரிவினரே தனது தந்தையின் படுகொலைக்கும்,ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மற்றும் கீத் நொயர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கும் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட புலனாய்வு குழுவின் தலைவராக புலத்வட்டேயே செயற்பட்டார் எனகாவல் துறையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருந்தன எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

எனினும் கீத்நொயரின் வழக்கிலிருந்து இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என கொழும்பை சேர்ந்த பத்திரிகையொன்று தெரிவித்திருந்தது எனபத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளதுடன் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் இரு பத்திரிகையாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட புலனாய்வு அதிகாரியை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வது பத்திரிகையாளர்களிற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவிற்கு கொண்டுவருகின்றோம் என இலங்கை தெரிவிப்பதற்கு முரணாக உள்ளது என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஆசியாவிற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் பட்லர் தெரிவித்துள்ளார்

இது இலங்கை பத்திரிகையாளர்களிற்கு புதிய ஆபத்தை உருவாக்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சிறிலங்கா இராணுவத்திடமிருந்து பதிலை பெறுவதற்காக மி;ன்னஞ்சல் மூலம் அவர்களை தொடர்புகொண்டோம் ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.