புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2019

நினைவேந்தல் ஏற்பாடுகள் மும்முரம்

முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவேநதல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் செய்துமுடிக்கப்பட்டுள்ளது.இதனிடையே விசேட திருப்பலி நிகழ்விற்கும் திட்டமிடப்பட்டுள்ளது இறுதி யுத்தத்தில் உயிர் இழந்த எமது உறவுகளுக்கான 10ம்ஆண்டு நினைவுத் திருப்பலி 18ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தலைவர் அருட்பணி மங்களரஜா தலைமையில் நினைவு கூட்டுத் திருப்பலி நடைபெறும் என்பதனை முல்லை மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்பணி ளு யு ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிரதான நிகழ்வு வழமையான துர்பியில் நடைபெறவுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் சாட்சியமாக அங்கு அப்போது பிறந்த சிறுமியொருத்தி இம்முறை ஈகைச்சுடரை ஏற்றவுள்ளார்.

ad

ad