6 மே, 2019

பாடசாலைகள் தொடக்கம்:பொறுமை காக்க கோரிக்கை

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னராக பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் இராணுவம் காவல்துறை குவிக்கப்படடிருந்த போதும் மாணவர்களது வரவு மிக குறைவாகவேயிருந்தது.

பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களது பொதிகள் சோதனையிடப்பட்ட பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே இதுவரை செயற்பட்டதைப் போன்று பொறுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் இலங்கையர்கள் அனைவரும் செயற்பட வேண்டுமென, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியன்மையை அடுத்து, அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.