புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மே, 2019

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுவீட்டுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு யாழ்.பலகலைக்கழக துணைவேந்தர் இலங்கை ஜனாதிபதியால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.30ம் திகதியிடப்பட்ட கடிதம் இன்றே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன், உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலமாக இதனை அறிவித்துள்ளார் என்றும் குறித்த கடிதம் இன்று (06) தொலைநகல் மூலமாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பம் இடப்பட்ட குறித்த கடிதத்தில், பதவி இடைநிறுத்தல் தொடர்பான காரணங்கள் அல்லது வேறு தகவல்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.