புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 மே, 2019

குளியாப்பிட்டியவில் தொடரும் பதற்றம்

இன்று குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய, கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.இதனையடுத்து உடனடியாக காவலதுறை மற்றும் ராணுவம் அங்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில்சிங்களவர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு கோரி காவல்துறை அலுவலகத்திற்கு முன்பாக சிங்களவர்கள் குழுமியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது, மக்களை விலகிச்செல்லுமாறு காவல்துறையினர் கூறியபோதும் மறுத்த மக்கள் அங்கு ரயர்கள் எரித்து போராட்டம் நடத்துகின்றனர்.