புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2019

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை! - கூட்டமைப்பிடம் ரணில் உறுதி


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

    
எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை விரைவில் பூர்த்தி செய்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையான அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றைய தினம் பாராளுமன்றத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தது. இச்சந்திப்பில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தனவும் கலந்து கொண்டதுடன், கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கவீந்திரன் கோடீஸ்வரன், ஸ்ரீநேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி பிரதமருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், ஜுன் 30ஆம் திகதிக்குள் இதற்கு தீர்வை வழங்குவதாக உறுதியளித்திருந்தபோதும் ஏப்ரல் 21 தாக்குதல்களால் அதற்கான நடவடிக்கைகள் காலதாமதடைந்திருந்ததை பிரதமர் தம்மிடம் எடுத்துக் கூறியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு தனியான கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தபோதும் குண்டுத் தாக்குதல்களால் அந்த நடவடிக்கைகள் குழப்பமடைந்தன. அது மாத்திரமன்றி தேசிய அளவில் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குழுவின் செயற்பாடுகளும் தற்போதைய நிலைமையால் தாமதடைந்துள்ளன என்பதையும் பிரதமர் எடுத்துக் கூறியிருந்தார்.
“கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதென ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே இணக்கம் காணப்பட்டது. இதற்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கும் நாம் ஏற்கனவே இணங்கியிருந்தாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எனினும், நாட்டில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஏற்ப்டட குண்டுத் தாக்குதல்களால் உருவான அசாதாரண சூழல்களால் இதனை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டதை நாம் அறிவோம். எனவே குறுகிய காலத்துக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்தப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad