புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 ஜூன், 2019

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம்

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம் நான்கு ஆளுநர்களுக்கு செயலாளராகவிருந்த எல்.இளங்கோவன்மீண்டும் கல்வி அமைச்சின் செயலாளராக நியமனம்


வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக மீண்டும் எல்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த நான்கு ஆளுநர்களுக்கு செயலாளராகவிருந்த எல்.இளங்கோவன் கல்வி அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த சி.சத்தியசீலன் ஆளுநரின் செயலாளராகவும் ஆளுநரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த இளங்கோவன் மீண்டும் அதே பதவிக்கு வந்துள்ளார்.


கல்வி அமைச்சின் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்து வரும் நிலையில் குறித்த இடமாற்றம் நடந்துள்ளது.

இதனிடையே கடந்த 22 வருடங்களாக மாகாணசபையில் இளங்கோவன் பணியாற்றிவருவது தெரிந்ததே.