27 ஜூன், 2019

கூட்டமைப்புக்கு மாற்றான அணி சாத்தியமில்லை! -சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நிலையில் காணவில்லை. ஏனெனில் கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக் கூடிய கட்சிகள் மத்தியில் கூட ஒற்றுமையைக் காணவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில் மாற்று அணி என்பது எப்படி சாத்தியம் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இதுவரைகாலமும் நாங்கள் பங்குபற்றினோம் என்பதை பகிரங்கமாக சொல்லலாம். அவ்வாறு பங்குபற்ற வேண்டியது எங்களுடைய கடமை. அந்தக் கடமையிலிருந்து விடுபட முடியாது. இந்த பேச்சுவார்த்தைகள் அரசமைப்பு நடவடிக்கைகள் முழுவதும் வெளிநாட்டு அழுத்தங்களால் நடைபெறும் விடயங்கள் தான்.

நாங்களாகவே அதை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் மீண்டும் சர்வதேசத்திடம் இதனைச் சொல்ல முடியாது. அரசாங்கம் பிழை விடுகின்ற போது அதை நாங்கள் எடுத்துக் கூறக்கூடிய விதத்தில் அரசாங்கம் தாங்களாகவே இந்த நடவடிக்கைகளை நிறுத்தினால் இதனை சொல்வதற்கு எங்களுக்கும் இலகுவாக இருக்கும்.

கூட்டமைப்பு தவறு விடுகிற போது ஒரு மாற்று அமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளைக் காணவில்லை. ஏனென்றால் இன்று கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக்கூடிய கட்சிகள் மத்தியில் கூட ஒரு ஒற்றுமையை நான் காணவில்லை. அவர்களில் ஒருவரை ஒருவர் பேசுவதும். ஒருவரை மற்றவர் 'றோ' என்றும் அதற்காக வேலை செய்கிறார்என்பதும் நான் அப்படியில்லை. இவர்தான் சீனாவிற்காக வேலை செய்கிறார் என்பதுமாக நிலைமை இருக்கிறது. இப்படியான நிலைப்பாடு இருக்கிற பொது சரியான மாற்றுக்கூட்டு ஒன்று எப்படி சாத்தியம்.

சரியான ஐனநாயகமான சூழ்நிலை தமிழ் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். இப்போதைய நிலையில் அதற்காக ஒரு மாற்றை என்னால் பார்க்க முடியாமல் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பிற்குள் பிழை இல்லாமல் இல்லை. கூட்டமைப்பை பொறுத்தமட்டில் பல பிழைகள் இருக்கின்றன. ஆனாலும் இருப்பதை உடைத்துக் கொண்டு போகிற போது சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

அப்படியான சரியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய வகையில் ஒரு மாற்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தான் இப்போதைக்கு நான் கூறக்கூடிய விடயம் என்றார்.