புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2019

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது யார்-யாருக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது யார்-யாருக்கு வாய்ப்பு?
Facebook Twitter Mail Text Size Print தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வருகிற 18-ந் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
பதிவு: ஜூலை 01, 2019 05:45 AM
சென்னை,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களில் கனிமொழி (தி.மு.க.), கே.ஆர்.அர்ஜூனன் (அ.தி.மு.க.), ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), வி.மைத்ரேயன் (அ.தி.மு.க.), டி.ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) ஆகிய 6 பேரின் பதவி காலம் இம்மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.



எனவே தமிழகத்தில் இருந்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 8-ந் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசனை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து இருக்கிறது. எனவே, தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுவை இவரிடமோ அல்லது சட்டசபை கூடுதல் செயலாளரிடமோ வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள இவர்களது அறையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 9-ந் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற 11-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்ந்தெடுக்க முடியும். இந்த இரு கட்சிகள் சார்பில் தலா 3 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தால் வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெறாது.

6 பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

இரு கட்சிகளின் சார்பில், தலா 3 பேருக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தால் தேர்தல் நடத்தப்படும். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க. தரப்பில் பா.ம.க.வுக்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடமும், தி.மு.க. தரப்பில் மாநிலங்களவை தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு இடமும் தருவதாக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அ.தி.மு.க. தரப்பில் வழங்கப்பட்ட இடத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும், தி.மு.க. தரப்பில் வழங்கப்பட்ட இடத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.

எனவே, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் மீதமுள்ள தலா 2 இடங்களுக்கு யார் தேர்ந் தெடுக்கப்படப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அ.தி.மு.க. தரப்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோரும், தி.மு.க. தரப்பில் தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வக்கீல் வில்சன் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

ad

ad