ஜனாதிபதி தேர்தலின் போது வெறுமனே பேச்சளவில் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் சாத்தியமான செயல்வடிவத் திட்டங்களை முன்வைக்கும் தரப்பு எதுவென்பதையும், அத்திட்டங்கள் அத்தரப்பின் அதேபோன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்திற் கொள்வதெனனும் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இவற்றுக்கு மேலாக தமிழ் மக்களின் மனங்களில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து, அவற்றுக்கு அமைவாகவே ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற இறுதித் தீர்மானத்தை எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. இதற்கமைய மாவட்டங்கள் தோறும் கருத்தரங்குகளை நடத்தி மக்களின் கருத்தை அறியவும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.