சனி, ஆகஸ்ட் 24, 2019

கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ,ரிசாட்டின் கட்சிஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடான நிலைமை இந்த வார இறுதிக்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.


அநுராதபுரத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

நாட்டில் உள்ள ஜனநாயகத்தை மதிக்கும் ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி எனவும், எனவே அதற்குள் நெருக்கடி நிலையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்