புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஆக., 2019

சுவிஸ் பேர்ண் நகரில் சைவ மக்களுக்கான சுடுகாடு

சுவிஸ் பேர்ண் நகரில் உள்ள பிறேம்கார்டன் திருவடிப்பேறு நடைபெறும் திடலில் (Bremgartenfriedhof. Murtenstrasse 51. 3008 Bern) வைரவர் காளியம்மன் திருக்கோவிலுக்கான காற்கோள்விழா ‘அடிக்கல் நாட்டல்’ இன்று 10. 08. 2019 சனிக்கிழமை முற்பகல் நடைபெற்றது.ஐரோப்பிய மண்ணில் சுவிற்சர்லாந்தில் சைவநெறிக்கூடத்தின் முனைப்பில் இந்து சைவத்திருக்கோவில்களின் நல்லாதரவுடன் பேர்ன் மாநிலத்தில் நகர சபை சைவத்தமிழர்களுக்கான திருவடிப்பேறு வழிபாடு நடாத்துவதற்கு ஏதுவாக பிறேம்கார்டன் சுடுகாட்டில் தனி இடம் ஒதுக்கி உள்ளது. இங்கு வைரவர் , காளியம்மன் திருக்கோவில் கருங்கல்லில் அமையத் திருவருள் கூடியுள்ளது.

பிறந்து வாழ்வு நிறைந்து ஒடுங்கும் இவ்விடத்தில் சைவத்தமிழர்களுக்கு அமையவிருக்கும் இத்திருக்கோவில் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது