புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஆக., 2019

HIT NEWS
--------------
டெல்லியில் பெரும் பரபரப்பு! சுவர் ஏறி குதித்து வீடு புகுந்த சி.பி.ஐ! ப. சிதம்பரம் அதிரடி கைது

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் எகிறி குதித்தது அவரை கைது செய்தனர்.

அவர் தற்போது விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

இதற்காக சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் மிக தீவிரமாக களமிறங்கி உள்ளனர். நேற்று மாலையில் இருந்து ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்தனர்.

ஆனால் ப. சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது இன்று மாலை வரை ரகசியமாக இருந்தார். இதையடுத்து திடீர் திருப்பமாக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னுடைய டெல்லி வீட்டிற்கு சென்றார். ப. சிதம்பரத்தை பின் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விரைந்து வந்தனர். ப. சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வேகமாக விரைந்து வந்தனர்.

ஆனால் ப. சிதம்பரம் வீட்டின் கதவை திறக்கவில்லை. இதனால் அங்கு கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ப. சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். கேட்டை தாண்டி எகிறி குதித்து 20 அதிகாரிகள் உள்ளே சென்றனர்.

அதையடுத்து ப. சிதம்பரம் வெளியே வர வேண்டும் என்று அதிகாரிகள் வெளியே காத்துக் கொண்டு இருந்தனர். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

போலீசாரை வைத்து தொண்டர்களை சிபிஐ அகற்றியது. இதையடுத்து சிதம்பரம் வீட்டிற்கு உள்ளே சென்ற அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.

அவர் தற்போது விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

முதல்முறை ஐஎன்எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரம் விசாரணை காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளார். நாளை இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்