புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஆக., 2019

சு.க.வில் இணையுமாறு கோட்டாவுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்வதே சிறந்த முறையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்