புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஆக., 2019

தமிழ் மக்களுக்கு விழுந்துள்ள உதை-சுமந்திரன்

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், “ கடுமையான யுத்த குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எம்.ஏ சுமந்திரன், சவேந்திர சில்வாவிற்கு எதிராக சர்வதேச அறிக்கைகள் பல குற்றம் சுமத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களை எட்டி உதைத்தது போல தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.