புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2019

காலி மைதானத்தில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களினால் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது.

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரு அணிகளினதும் சர்வதேச டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடராக அமைந்த இத்தொடரின் முதல் போட்டி, 14ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.

எதிர்பார்ப்பு நிறைந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

மழையுடன் ஆரம்பமான இந்த போட்டியில், நியூஸிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஸ் டெய்லர் 86 ஓட்டங்களையும், ஹென்ரி நிக்கோல்ஸ் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பில், அகில தனஞ்சய 5 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது முதன் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 267 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக நிரோஷன் டிக்வெல்ல 61 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 50 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு சார்பில், அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், வில்லியம் சோமர்வில்லே 3 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

18 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக 285 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக வாட்லிங் 77 ஓட்டங்களையும், டொம் லதம் 45 ஓட்டங்களையும், வில்லியம் சோமர்வில்லே ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பில், லசித் எம்புல்தெனிய 4 விக்கெட்டுகளையும், தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், அகில தனஞ்சய 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 04 விக்கட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்று வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது.

காலி மைதானத்தை பொருத்தவரை இதற்கு முன்னர் 2014ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 99 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது. இதுவே இந்த மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய வெற்றியிலக்காக அமைந்திருந்தது.

அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த மைதானத்தில் 2012ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 93 என்ற வெற்றியிலக்கினை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad