புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2019

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பசெலெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“போரின் போது, அவரும், அவரது படைகளும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதான தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் குழப்பமடைந்துள்ளேன்.

இவர் முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டது, கவலை தரும் நிலைமை என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், 2019 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தார்.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

அவரது படைப்பிரிவு, அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக, ஐ.நா விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் போது, இலங்கை அளித்த வாக்குறுதிகள் விடயத்தில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும்

இது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களையும், போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும், மிக மோசமாக பாதிக்கும்.



இது பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். அத்துடன், ஐ.நா அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad