வலிகாமம் வடக்கில் கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கு வசதியாக, அவர்களிற்கு மாற்று காணிகளை அடையாளம் காண்பதென நேற்று முடிவாகியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, மேற்படி முடிவு எட்டப்பட்டது