புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 அக்., 2019

கூட்டமைப்பாளர்கள் உரிய முடிவை உரிய வேளையில் எடுப்பார்கள் என்றும், அது சரியான முடிவாக இருக்கும் மனோகணேசன்.தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் புற ஆதரவு கட்சி. அது உள் பங்காளி கட்சி அல்ல.எனவே எடுத்த எடுப்பிலேயே வந்து ஆதரவு அளித்தே விடுங்கள் என்றும், எங்கள் மேடையில் ஏறி நின்று கை காட்டுங்கள் என்றும் அவர்களை நாம் அவசரப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார் அரச அமைச்சர் மனோகணேசன்.

அவர்களது 2015 தேர்தல் விஞ்ஞாபனத்தையும், எமது நாலரை ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகள், வேதனைகள் ஆகியவற்றையும், சீர்தூக்கி பார்த்து, அவர்களது வாக்காளர்களின் மனநிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, கூட்டமைப்பாளர்கள் உரிய முடிவை உரிய வேளையில் எடுப்பார்கள் என்றும், அது சரியான முடிவாக இருக்கும் என்றும் எனக்கு நம்பிக்கை உண்டு.


முன்னே நடக்க போவதை எதிர்பார்ப்பதும், ஊகிப்பதும்தானே, நம்பிக்கை. ஆகவே இங்கே நல்லது நடக்கும் என நம்புவோம் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற பேரத்தில் கூட்டமைப்பு தலைமை ஈடுபட்டுள்ள நிலையில் மனோகணேசன் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்