புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 அக்., 2019

பிரபல நகைக் கடை கொள்ளை வழக்கின் தலைவன் முருகன் பெங்களூரில் சரண்

அக்டோபர்- 1 ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுவற்றை துளையிட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருவாரூர் அருகே நகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ், மணிகண்டனை காவல்துறையினர் துரத்தி சென்று பிடிக்க முயன்றன. ஆனால் சுரேஷ் தப்பிய நிலையில், மணிகண்டன் காவல்துறையிடம் சிக்கினார். சுரேஷை காவல்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

murugan
இதை அடுத்து திருச்சியில் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான தனிப்படை பிரிவு செங்கம் நீதிமன்றத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பிரபல நகை கொள்ளையன் முருகன் எங்கு இருக்கிறான் என்ற தகவல் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முருகன் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்