புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2019

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் tதென் ஆ

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் சேர்த்து இருந்தது.

தனது 23-வது அரைசதத்தை கடந்த கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் (105 பந்து, 10 பவுண்டரி), ரஹானே 18 ரன்களுடனும் (70 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த நிலையில், 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரகானே 59 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலிக்கு ஜடேஜா பக்க பலமாக விளையாடினார். அபாரமாக ஆடிய விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 7-வது இரட்டை சதம் இதுவாகும்.

ஜடேஜா 93 ரன்களில் ஆட்டமிழந்ததும் இந்தியா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி 156.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை துவங்கி பேட் செய்து வருகிறது

ad

ad