புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2019

துப்புத் துலக்கிய பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா நாட்டை விட்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கி ஓட்டம்!

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து, விசாரணைகளை நடத்தி வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வௌியேறினார். இன்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார்.

இவர் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டவராவார்.

நிசாந்த சில்வா அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து WK 0065 என்ற விமானத்தின் ஊடாக சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.