புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2019

4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? பொலிஸ் கமிஷனர் பேட்டி


பெண் கால்நடை மருத்துவர் பலாத்கார குற்றவாளிகளை ஏன் சுட்டதாக பொலிஸ் கமிஷனர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சஜ்ஜனார் இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,குற்றவாளிகள், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பொலிஸ் பதிலுக்கு சுட்டதாக, விளக்கம் அளித்துள்ளார்.

கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது அனைவருக்குமே தெரியும்.

இதையடுத்து, காவல்துறை விசாரணையை ஆரம்பித்தோம். அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மற்றும் பிற ஆதாரங்களை நாங்கள் சேகரிப்போம்.இந்த விசாரணை தொடர்பாக, 4 பேரை கைது செய்தோம். நான்கு பேருமே தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இதையடுத்து கடந்த 30ம் திகதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதன்பிறகு அவர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினோம். அதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினோம். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திற்கு 4 பேரையும் அழைத்து வந்தோம்.

இன்று காலை சுமார் 5.45 மணியளவில், கொலை நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்றோம். அங்கே பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட சில ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கொடுத்த தகவலை தொடர்ந்துதான் நாங்கள் அழைத்துச் சென்றோம்.

அப்போதுதான் திடீரென குற்றவாளிகள் 4 பேரும் திடீரென கற்களை எடுத்து காவல்துறையினர் மீது வீசினர். கம்புகளை எடுத்து அடித்தனர். காவல்துறையினரின் துப்பாக்கியை பிடுங்கி சுடத் தொடங்கினர்.

இருப்பினும் காவல்துறையினர் பொறுமையை கடைபிடித்து 4 பேரையும் சரணடையுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டனர்.

அதை அவர்கள் ஏற்கவில்லை என்பதால் வேறு வழியின்றி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் நான்கு பேரும் கொல்லப்பட்டனர். வெங்கடேஷ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் இந்த தாக்குதலில் காயமடைந்து உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளா

ad

ad