வெள்ளி, டிசம்பர் 06, 2019

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். அதில் சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்களில் 11 பேரே இவ்வாறு வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். அதில் சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்களில் 11 பேரே இவ்வாறு வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

அப்பகுதியிலுள்ளவர்களை மீட்பதற்காக வருகை தந்த இராணுவமும், கடற்படையினரும், குமுழமுனை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தற்போது மீட்பு பணியை மேற்கொள்ள படகு மூலம் சென்று கொண்டிருக்கின்றனர். மேற்படி விடயத்தை அனர்த்த முகாமைத்துவ பிரிவும் சம்பந்தப்பட்ட அமைச்சும் கருத்திலெடுத்து துரித பணியை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வருடமும் முல்லைத்தீவு நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில் சிக்கியிருந்த மக்களை விமானத்தின் மூலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.