22 ஜன., 2020

100 கோடி கேட்கிறார் ஹிருனிகா
எடிட் செய்யப்பட்ட தொலைபேசி குரல் பதிவுகளை வெளியிட்ட நான்கு ஊடகங்கள் மீது 100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக ஹிருனிகா பிரேமசந்திர எம்பி தெரிவித்துள்ளார்.
ஹிருனிகா – ரஞ்சன் பேசிய இரண்டு குரல் பதிவுகள் வெளியான நிலையில், அதில் ஒன்று எடிட் செய்யப்பட்ட குரல் பதிவு என்று ஹிருனிகா தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே அதனை வெளியிட்ட ஹிரு, தெரண, ரூபவாஹினி, ஐடிஎன் ஆகிய ஊடகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக நேற்று (21) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.