புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஜன., 2020

காணி உரிமங்களை பதிவு செய்ய புதிய முறை

காணி உரிமங்களை இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவுசெய்வதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் தீர்மானித்துள்ளது.

காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே தெரிவித்துள்ளார்.

போலிக் காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிப்பு தொடர்பில் வருடமொன்றுக்கு சுமார் 3,000 முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணி பதிவுசெய்வதற்கான புதிய மென்பொருளை அடுத்த மாதம் தொடக்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காணிப் பதிவுகள் விரைவுபடுத்தப்படும் எனவும் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்