புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2020

ஜனவரி 24 - மாபெரும் ஆர்ப்பாட்டம்! - RER மற்றும் மெற்றோ முற்றாக தடை
நேற்று முன்தினம் திங்கட்கிழமையில் இருந்து வழமைக்குத் திரும்பிய போக்குவரத்து, இந்த வார வெள்ளிக்கிழமை மீண்டும் பாரிய தடைக்கு உள்ளாகின்றது.
RATP மற்றும் SNCF இன் தொழிலாளர்கள் மாபெரும் வேலை நிறுத்தத்துடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளனர். ஜனவரி 24, வெள்ளிக்கிழமையை 'இருண்ட நாள்' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் RER சேவைகள், மெற்றோ மற்றும் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக தடைப்பட உள்ளன.
ஓய்வூதிய சீர்திருத்தத்தை கண்டித்து இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டம், கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் போல் மிக பிரம்மாண்டமாய் இடம்பெறும் என தொழிற்சங்கம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சங்களைச் (பொது போக்குவரத்து தொழிற்சங்கம்) சேர்ந்த ஊழியர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

ad

ad