புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஜன., 2020

விந்தன்-பா உ க்கு ஆசைப்பட்டு மாகாணசபையும் போயிடும் போல வேண்டாம் இப்படியே இருந்திருவோம் என்கிறாரா .நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவு:விந்தன் அறிவிப்பு?எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் யாழில் ஏழு முனை போட்டியாக இருக்கும்.ஆனாலும் எமது கட்சியான டெலோ சார்பில் முன்மொழியப்பட்ட வேட்பாளரது வெற்றிக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம் என அக்கட்சியின் முக்கியஸ்தரான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் ஏற்கனவே முன்னைய நாடாளுமன்ற தேர்தல்களில் கே.சிவாஜிலிங்கம்,என்.சிறீகாந்தா ஆகியோர் போட்டியிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து எமது கட்சி சார்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.


இம்முறை கூட்டமைப்பு ,முன்னணி,முன்னாள் முதலமைச்சரது கூட்டணி,ஈபிடிபி,ஜதேக மற்றும் சுதந்திரக்கட்சி,பெர்துஜனபெரமுன் என போட்டியிருக்கபோகின்றது.

தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் அடுத்து வரும் மாகாணசபை தேர்தலிலும் வெற்றியை தக்க வைக்கவேண்டிய தேவை டெலோவிற்குள்ளது.
இம்முறை தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னதாக டெலோ தனது வேட்பாளரை யாழ்.மாவட்டத்திற்கு அறிவித்துள்ளது.

இம்முறை தேர்தல் சவால் மிக்கதாக உள்ள போதும் எமது கட்சியை சேர்ந்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் நிச்சயம் பாடுபடுவோம் என விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

முன்னதாக விந்தன் கனகரட்ணத்தினது சந்தர்ப்பத்தை தட்டிப்பறித்து சுரேனிற்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் அதனையடுத்து அவர் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் ஊடகங்கள் முன்னதாக வருகை தந்து தனது ஆதரவை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்