புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 ஜன., 2020

ரெலோ முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் கட்சியின் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறியுள்ளார்.

ரெலோ கட்சி முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுரேன் என்பவர் ரெலோ ஊடாக யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த
நிலையிலேயே அவர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக தெரியவருகிறது.ஸ்ரீகாந்தாவின் சிஷ்யப்பிள்ளையான இவர்   சிறிகாந்தா  சிவாஜிலிங்கம்  கட்சியை விட்டு  வெளியேறிய போதும் கூட   சுயலாப  நோக்கோடு  அவர்களையே  எதிர்த்தாடி  ரெலோவில் ஒரு  எம் பி பதவியை குறிவைத்து   இருந்தமை குறிப்பிடத்தக்கது டெலோவுக்கு யாழ் மாவட்ட்துக்கு  ஒன்று  அலல்து இரண்டோ   கிடைக்கபோகிறது   ஸ்ரீகாந்தா  சிவாஜிலிங்கத்தை  மீறி  தனக்கு  எங்கே  கிடைக்கப்போகிறது என்று   ஏங்கி இருந்தவருக்கு  அவர்கள்  வெளியேறியது  நாவூற  வைத்தது  .  டெலோ ஸீட்  தனக்கு நிச்சயம்  என்று  இருந்தவருக்கு சுரேனுக்கு  அந்த இடம்    செல்வதை   பொறுக்க முடியாமல்  வெளியேறுகிறார் . பலகட்ட ங்களில்  பெண்கள்  விஷயத்தில் கடைசி பெயரை  கெடுத்திருந்தவர  வெளியேறுவது தலைமைக்கு  மகிழ்ச்சியை  கொடுத்துள்ளது   ஸ்ரீகாந்தை  சிவாஜிக்கே  கலங்காத தலை மை  இப்போது கலங்குமா செல்லாக்காசாகப்போவது நிச்சயம்
இதனிடையே சமூகவலைத்தள குழு ஒன்றின் ஊடாக தனது வெளியேற்றத்தினை உறுதிப்படுத்தியுள்ள விந்தன்,
அரசியல் வாழ்வில் மூன்று தவறுகள் விட்டுள்ளேன் முதல் தவறு ரெலோவில் இணைந்தது
இரண்டாவது தவறு கடந்த மாநாட்டில் கட்சியில் எனக்கு கிடைத்த பொறுப்புக்களை வேறொருவருக்கு விட்டுக் கொடுத்தது
மூன்றாவது மிகப்பெரிய தவறு கட்சிக்காக சிறீகாந்தா அண்ணன் சிவாஜி அண்ணரை எதிர்த்தது
இதற்காக அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன் இவ் இணைப்பில் இருக்கும் சிலருக்கு அவ் இருவருடனும் தனிப்பட்ட ரீதியிலான நட்பு இருக்கு என நான் அறிவேன் தயவு செய்து என் மன்னிப்புக் கோரலை அவர்களிடத்தில் சொல்லுங்கள்,
இப்பொழுதும் இனியும் நான் திருப்தியடைவது இன்று கட்சியின் அனைத்துக் குழுக்களிலும் இருந்து ராஜினாமா செய்தது. என்று குறிப்பிட்டுள்ளார்.