புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 ஜன., 2020


நாடாளுமன்றை அதிர வைத்த ரஞ்சன் ராமநாயக்க

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அவர்களின் மனைவிமாரின் தொலைபேசிய உரையாடல குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அவர்களின் மனைவிமாரின் தொலைபேசிய உரையாடல குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நான் கூறிய விடயங்களை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை உருவாக்க வேண்டும்.

அப்போது ஆவணங்களுடன் அதில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்கின்றேன். மேலும் தன்னிடம் இருக்கும் குரல் பதிவுகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் குரல் பதிவுகள் இல்லை. ஆனாலும் ஆளும் தரப்பை சேர்ந்த மற்றும் முன்னாள் அரசியல் சார்ந்தவர்களின் குரல் பதிவுகளை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றேன்.

இந்த உலகில் பேசிய விடயங்களை மறைக்கும் பலர் இருக்கின்றனர். இத்தகையவர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே தொலைபேசி மற்றும் முக்கிய கலந்துரையாடல்களை பதிவு செய்து கொண்டேன்.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள், அமைச்சரவை அமைச்சர்களின் மனைவிமார்களின் குரல்பதிவுகள் என அனைத்து குரல் பதிவுகளையும் நாடாளுமன்றில் வெளிப்படுத்துவேன்” என குறிப்பிட்டுள்ளார்