புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2020

உழவர் திருவிழாவுக்கு மாட்டுவண்டியில் வந்த மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வும் இன்று சாவகச்சேரியில் கோலாகலமாக இடம்பெற்றது
சங்கத்தானை முருகன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் மாட்டுவண்டி மற்றும் இசை வாத்தியங்களுடன் நடைபவனி ஆரம்பமாகி சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. அங்கு உழவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கோபூஜை,மங்களைசை,பொங்கல்,கௌரவிப்பு நிகழ்வு ,நடன நிகழ்ச்சிகள்,கவியரங்கம் மற்றும் இன்னிசை கச்சேரி ஆகியன இடம்பெற்றன.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டார் .
மேலும் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சரவணபவன் ,சுமந்திரன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ad

ad