புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2020

 சம்பந்தனிடம் உறுதி அளித்த பிரித்தானிய சிறப்புப் பிரதிநிதி

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பிரித்தானியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாக, பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லியின் இலங்கைக்கான உத்தியோக்கபூர்வ பயணத்தின், முதல் சந்திப்பாக இது அமைந்தது,

இந்த சந்திப்பை அடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் கரேத் பேய்லி சந்தித்து பேசினார். இதன்போது பாதுகாப்பு மற்றும் காலநிலை முன்னுரிமைகள் குறித்தும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ad

ad