புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஜன., 2020

கொழும்பில் 25 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை - 57 பேர் கைது


கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய 25 சட்டவிரோத பாலியல் விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் படி கடந்த
16 ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது
சட்டவிரோதமாக பாலியல் தொழில் விடுதிகள் இயங்குவதாக கிடைத்த தகவலுக்கு அமைய 35 மசாஜ் நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 25 பாலியல் தொழில் இடம்பெற்ற விடுதிகளின் முகாமையாளர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை, வெல்லவத்தை, கிருலபனை, பம்பலப்பிட்டிய, நாரஹேன்பிட, கிரேன்பாஸ், மருதானை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இயங்கிய பாலியல் தொழில் மையங்களே சுற்றிவளைக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளனர்