புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2020

யாழ் மாவட்ட மகளிர் அமைப்புக்களால் நாளை கண்டன போராட்டம்தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் முன்னணிஆதரவு
பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை , பாலியல் வதைகளுக்கு எதிராகவும் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களை கண்டித்து நாளைய தினம் கண்டனப் போராட்டம் யாழ் பல்கலைக்கழகம் முன்பாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக ரீதியான மேம்பாட்டிற்காக ஆபாச நோக்கில் தகாத படங்களோடு தொடர்ச்சியாக செய்திகளை வெளியிடுகின்ற இணையத்தளங்களை முடக்கவேண்டும் என பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் மாவட்ட மகளிர் அமைப்புக்களால் நாளை காலை ஒன்பது மணியளவில் கண்டன போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் முன்னணியும் இக்கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளது