புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2020

சஜித் இதயத்தால் உருவான கூட்டணி
சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி முன்மொழியப்பட்ட 'இணைந்த மக்கள் இயக்கம்' (சமகி ஜன பலவேகய) என்ற பெயரில்
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட 'நாம் தேசிய முன்னணி' பிரதி தலைவர் சேனக சில்வா "தமது கட்சியின் பெயரை இணைந்த மக்கள் இயக்கம் என பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இணைந்த மக்கள் இயக்கத்தை பதிவு செய்ய ஆணைக்குழு ஒப்புக் கொண்டுள்ளது" - என்றார்.
இதேவேளை குறித்த கூட்டணியின் முன்மொழியப்பட்ட "இதயம்" சின்னத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சேனக சில்வா "நாட்டின் அரசியல் கட்சிகளால் பயன்படுத்தக்கூடிய சின்னங்களின் வர்த்தமானி பட்டியலில் ‘இதயம்’ சின்னம் இல்லை என்றும், எனவே தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சின்னத்தை ஒதுக்க தேசிய தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டதாகவும்" - தெரிவித்தார்