புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2020

டெல்லி சட்டசபை ஆம் ஆத்மி 62 பா ஜ 8 காங்கிரஸ் 0
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி வாழ்த்து
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக 2013ம் ஆண்டு டிசம்பர் முதல் 2014ம் ஆண்டு பிப்ரவரி வரை 49 நாட்கள் பதவி வகித்தார். 2015 தேர்தலில் 2வது முறை வென்று முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார். தற்போது 3வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில்,

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.