புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 பிப்., 2020

வன்னியில் லிங்கநாதன், சிவலிங்கம் புளொட் சார்பில் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் புளொட் சார்பில் வன்னி மாவட்டத்தில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் கந்தையா சிவலிங்கமும் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்னி மாவட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் எமது கட்சி சார்பில் இரு வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தந்த மாவட்ட குழுக்களில் தீர்மானித்து வேட்பாளர்கள் யார் என்பதை உறுதி செய்து அறிவிப்போம் என புளொட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அண்மையில் வவுனியாவில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் க.சிவலிங்கம் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதுடன், விரைவில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.