புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

30 மார்., 2020

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை:

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:
கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:

•பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து வெளிவரும் நம்பிக்கையூட்டும் செய்திகள், கோவிட்-19 பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கெனக் கனடாவும், கனேடியர்களும் எடுத்து வரும் நடவடிக்கைள் சரியானவையென்பதை மீளவும் உறுதி செய்கின்றன. சமூக இடைவெளி பேணல், சுய தனிமைப்படுத்தல், அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் நிறுத்துதல் போன்றன வைரஸ் பரம்பல் வீதத்தைக் குறைக்கின்றன. பரம்பலை மேலும் குறைப்பதற்கு இந்த நடவடிக்கைகள் இறுக்கமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டும்.

(பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதையும் கருத்திற் கொள்ளும்போது வைரஸ் பரம்பல் வீதம் குறைவடைய ஆரம்பித்துள்ளதாக அந்த மாகாண சுகாதார அதிகாரி மார்ச் 27 ஆந் திகதி அறிவித்தார். இருப்பினும், வைரஸ் சமூகத்தில் தொடர்ந்தும் பெருமளவில் பரவுகிறது.)

• தடிமன் அல்லது சளிக்காய்ச்சல் (flu) அறிகுறிகளைக் கொண்டிருப்போர் மார்ச் 30 ஆந் திகதி திங்கட்கிழமை நண்பகலில் இருந்து உள்நாட்டுப் பயணங்களையும், பெருநகரங்களுக்கு இடையிலான பயணங்களையும் மேற்கொள்ள வாகனங்களில் ஏற அனுமதிக்கப்பமாட்டார்கள். இந்த உள்ளுர்ப் பயணத் தடை, தொடருந்துகள், விமானங்கள் ஆகிய இரண்டு மார்க்கங்களுக்கும் பொருந்தும்.

• கனடாவின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கான திட்டமிடலில் இளைய கனேடியர்கள் ஆற்றிவரும் பங்கைப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார். காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை, வறுமை ஒழிப்பு போன்றவற்றிலும் வேறு பலவற்றிலும் செயலாற்றும் கனேடிய இளையோருக்கு கோவிட்-19 நெருக்கடி வேளையில் ஆதரவளிக்கவேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டார்.

பிரதம மந்திரி அவரது இளையோர் சபையின் உறுப்பினர்களை நேற்றுச் சந்தித்துக் கனேடிய இளையோரின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். சமூகத்தில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் கூடியோருக்கான உதவி, மனநலம் பேணலுக்கான உதவி ஆகியவற்றுடன் கோடை கால வேலைவாய்ப்பு, பயணம் போன்ற எதிர்காலத் திட்டங்கள் கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை ஆகியன குறித்து அவருக்குக் கூறப்பட்டது. அவர் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டார்:

- இந்த வாரம் அறிவிக்கப்பட்ட கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு (Canadian Emergency Response Benefit (CERB)) விண்ணப்பதற்குப் பல இளையோர் தகுதி பெறுவார்கள்;.

- சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு நேற்று அறிவிக்கப்பட்ட உதவிகள் மூலம் பலர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி பெறுவார்கள். அத்துடன்,

- இளைய கனேடியர்கள் புறக்கணிக்கப்படாதிருப்பதையும், இந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதையும் உறுதி செய்வதற்காக - இளைய கனேடியர்களின் கருத்துக்களைத் தொடர்ந்தும் செவிமெடுக்கவுள்ளதாக அவர் உறுதியளித்தார்.

• தனிநபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இந்த வாரம் அறிவிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளைப் பிரதம மந்திரி நினைவுபடுத்தினார். கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canadian Emergency Response Benefit (CERB)) மூலம் வருமானம் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாதமொன்றுக்கு 2000 டொலர் வீதம் நான்கு மாதங்களுக்கு உதவி வழங்கப்படும்.

பணியாளர்களை பணிநீக்கம் செய்யாது தொடர்ந்தும் வைத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு 75 சதவீதம் வரையிலான சம்பள மானியம் வழங்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு 40,000 டொலர் வரையிலான கடன்கள் வழங்கப்படும் - இந்தக் கடன்களுக்குப் 12 மாதங்கள் வட்டி அறவிடப்படமாட்டாது, அத்துடன் தகுதி பெறும் வணிக நிறுவனங்களின் கடன்களில் 10,000 டொலர் வரை தள்ளுபடி செய்யப்படும் சந்தர்ப்பமும் உள்ளது.

- இந்தத் திட்டங்கள் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்

- கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு (Canadian Emergency Response Benefit (CERB)) விண்ணப்பிப்பதற்குத் தயார்படுத்திக் கொள்வதற்காக கனேடியர்கள் My CRA கணக்கொன்றை உருவாக்கிக்கொள்ளலாம்.

(www.canada.ca/en/revenue-agency) - பணத்தை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்குக் கனடா வருமானவரி முகவரகத்திடம் (Canada Revenue Agency (CRA)) நேரடி வைப்புக்காக (Direct Deposit) விண்ணப்பிக்குமாறு கனேடியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.