30 மார்., 2020

கனடாவில் கொரோனா - அதிகாலை நிலவரம்!

கனடாவில் இன்று அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,655 ஆக அதிகரித்துள்ளது.

கனடாவில் இன்று அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,655 ஆக அதிகரித்துள்ளது.

கனடாவில் கியூபெக் மாகாணத்திலேயே அதிகளவில கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2,498 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவில், 1,144 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 19 பேர் மரணமடைந்துள்ளனர்.பிரிட்டிஸ் கொலம்பியாவில், 17 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், 884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்பேர்டாவில், 621 பேரைப் பாதித்துள்ள போதும், கொரோனா வைரஸினால் அங்கு இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.