புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஏப்., 2020

வீட்டுக்குள் இருந்தால் ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஒருவர் காப்பாற்றப்படுகின்றார்24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 424 சாவுகள்

மொத்தச் சாவுகள் 12. 210

வைத்திசாலையில் 8.044 சாவுகள் (+424)

வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து 4.166 சாவுகள்


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 30 767 (+392)

உயிராபத்தான நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 7066 (-82)


23.200 இற்கும் மேற்பட்ட நோயளிகள் முற்றாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


மொத்தமாக 117,749 (+4,799) பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுகொரோனா வைரஸ் தொடர்ச்சியால பல உயிர்களை காவுவாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், சுகாதார பணிப்பாளர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்ளிருப்பு சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடித்து, வீட்டுக்குளேயே இருந்தால் ஒவ்வொரு எட்டு நிமிடத்திலும் ஒருவர் காப்பாற்றப்படுகின்றார் என சுகாதார பணிப்பாளர் Jérôme Salomon தெரிவித்துள்ளார். மிக கட்டுப்பாட்டுடன் உள்ளிருப்பு சட்டத்தை கடைப்பிடித்தால் பல உயிர்களை காப்பாற்றலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுகாதார அமைச்சர் Olivier Véran இதே தகவலை குறிப்பிட்டிருந்தார். இலண்டனின் இம்பீரியல் கல்லூரி ( de l'Imperial College London) இன் தரவுகளை மேற்கோள் காட்டி, பிரான்சில் ஒவ்வொரு எட்டு நிமிடத்திலும் ஒருவர் காப்பாற்றப்படுகின்றார் என தெரிவித்திருந்தார்.