புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 ஏப்., 2020

31ம் நாள் நினைவஞ்சலி

சதாசிவம் லோகநாதன்
இறந்த வயது 59

பிறப்பு30 OCT 1960
இறப்பு25 MAR 2020
அமரர் சதாசிவம் லோகநாதன்
இறந்த வயது 59
Tribute1
 
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஜோனாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் லோகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
தொட்டிலிலும் தோள்மேலும் தூக்கியெமை தங்கத்
தட்டில்தான் சோறிட்டு தங்கநிலாதான் காட்டி
பொட்டிட்டு பூச்சூட்டி பூவுலகில் பேரெடுக்க
பட்டதுன்பம் யாரறிவார் யாமறிவோம் அப்பாவே
பார்போற்ற பெற்றெடுத்து பண்போடு அறிவூட்டி
சீர்சிறக்க வாழ வைத்து செல்வங்களும்சேருவித்து
ஊருலகு ஓடவைத்து உயரத்தில் ஏற்றி விட்டு
பேரெடுக்க வைத்த தெய்வம் பேசாமல் போனதென்ன
நாவெடுத்து நாம் வாழ்த்த நல்வழி நமக்களித்த உமை
சாவெடுத்து போனதுவோ அதுவும் சரித்திரத்தில் ஆனதுவோ
பாவெடுத்து வருவோமென பரமனுக்கும் பொறுக்கலையோ
பூவெடுத்து போற்றுகின்றோம் பெருமானடி போய்ச்சேர்வாய்
அன்புடன் மனைவி, பிள்ளைகள்,
மருமகன், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்.
சாந்தி!சாந்தி!சாந்தி!
25-03-2020 திங்கட்கிழமை அன்று சுவிட்சலாந்தில் எம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்த எங்கள் குடும்பத்தலைவனின் மறைவுசெய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி, சமூகவலைத்தளங்கள், இணையங்கள் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் தந்த அனைத்து உறவினர்கள், நண்பர்களுக்கும் குடும்பத்தினர் சார்பில் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
சிவலிங்கம் - சகோதரர்
 
சாந்தி - சகோதரி