புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

30 ஏப்., 2020

மறவன்புலவில் வாள்வெட்டு - ஈபிடிபி உறுப்பினர், மனைவி காயம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில், ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர் என தகவல்கள் கூறுகின்றன.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில், ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர் என தகவல்கள் கூறுகின்றன.

நேற்றிரவு 7.15 மணியளவில் மறவன்புலவில் உள்ள, பிரதேச சபை உறுப்பினர் அரியகுட்டி நிமலரூபனின் வீட்டுக்கு, மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் கொண்ட குழுவினரே, அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், பிரதேச சபை உறுப்பினர் அரியகுட்டி நிமலரூபனும் , அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்ற போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதேச சபை உறுப்பினர் அரியகுட்டி நிமலரூபன் உரையாற்றியிருந்தார் என்றும், அதன் பின்னணியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவரும், சிறு காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.