12 மே, 2020

www.pungudutivuswiss.com
நான்கு கட்டங்களாகப் பாடசாலைகள் மீண்டும் திறப்பு.
நான்கு கட்டங்களில் பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அங்கு கிருமி தொற்று நீக்கம் செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்லும் பணியில் இறுதிக்கட்டம் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதேயாகும் எனவும் கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

நேற்று (11) மாத்தறை மாவட்டக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.